பரமன்குறிச்சி பூரண கிருபை AG சபையின் ஞாயிறு ஆராதனையில், முனைவர் B. Beviston அவர்கள் எழுதிய ‘கிறிஸ்தவம் காட்டும் பாதை’ என்ற நூல் சிறப்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சபையின் போதகர் Rev. A. Bemiliton அவர்கள், இந்நூலை தேவனுடைய சந்நிதியில் அர்ப்பணித்து, இதன் மூலம் அநேகர் சுவிசேஷ சத்தியத்தை அறிந்து, கிறிஸ்தவ வாழ்வில் உறுதியாக வளரவும், நூல் பலருக்கும் ஆசீர்வாதமாக அமையவும் சிறப்பு ஜெபம் செய்து பிரதிஷ்டை செய்தார்கள்.
தொடர்ந்து, Pr. Kiruban Joshua அவர்கள் இந்நூலின் நோக்கம், வேதாகம அடிப்படையிலான உள்ளடக்கம், கிறிஸ்தவ வாழ்க்கைக்கு வழிகாட்டும் போதனைகள் மற்றும் ஒவ்வொரு விசுவாசியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய சிறப்பம்சங்களை சபை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.
ஆராதனையில் கலந்துகொண்ட விசுவாசிகள் இந்த நூலை ஆர்வமுடன் வரவேற்று, இது ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்திலும் இருக்க வேண்டிய பயனுள்ள நூலாக அமையும் என்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வு, கிறிஸ்தவ இலக்கிய ஊழியத்தை ஊக்குவிக்கும் ஆசீர்வாதமான தருணமாக அமைந்தது.
