சென்னை | ஜூன் 6, 2026
AAICLAS-ல் 158 செக்யூரிட்டி ஸ்கிரீனர் பணியிடங்கள்; பிளஸ் 2 தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்
விமான சரக்கு போக்குவரத்துத் துறையில் செயல்பட்டு வரும் AAI Cargo Logistics & Allied Services Company Limited (AAICLAS) நிறுவனத்தில் Security Screener (Fresher) பணிக்கான 158 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடங்கள் விவரம்
மொத்த காலியிடங்கள்: 158
விமான நிலைய வாரியாக:
- டேராடூன் – 17
- கொல்கத்தா – 25
- பாட்னா – 37
- திருச்சி – 28
- கோழிக்கோடு – 17
- உதய்பூர் – 34
கல்வித் தகுதி
- பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள் போதுமானது.
- ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
- 01.05.2026 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு.
- ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பள விவரம்
- முதல் ஆண்டு: ரூ.30,000
- இரண்டாம் ஆண்டு: ரூ.32,000
- மூன்றாம் ஆண்டு: ரூ.34,000
விண்ணப்பக் கட்டணம்
- பொது / ஒபிசி: ரூ.750
- எஸ்சி / எஸ்டி / பொருளாதார ரீதியாக பின்தங்கியோர் / பெண்கள்: ரூ.100
கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
AAICLAS-ன் அதிகாரப்பூர்வ இணையதளம்:
மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதி
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08 ஜூன் 2026
விமான நிலையத் துறையில் பணிபுரிய விரும்பும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வேலைவாய்ப்பாகும்.
