Fort du Mont Bart : à gauche : galerie munie de sa voie de chemin de fer reliant la rue du rempart au magasin sous roc ; à droite : escalier d'accès au magasin sous roc (HDR).
மதுரை:
குணா குகை கண்காட்சியை உடனடியாக நிறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குணா குகை கண்காட்சியில் அடிப்படை வசதி இல்லை என கூறி சபீனா பானு என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், மதுரை ஐயர் பங்களா பகுதியில் ‘குணா குகை கண்காட்சி’ செப்.7ம் தேதி முதல் நடந்து வருகிறது. 15 நிபந்தனைகளுடன் கண்காட்சிக்கு அனுமதி தந்த நிலையில் அதில் 10 நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என தீயணைப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நிபந்தனைகளை நிறைவேற்றிய பின் அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியதும் கண்காட்சியை தொடங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
