நாய் நக்கியதால் கை, கால்களை இழந்த பெண் வளர்ப்பு நாய் நக்கியதால், மஞ்சீத் சங்கா (56) என்பவர் சாவின் விளிம்பிற்கு சென்றுள்ளார். காலில் இருந்த காயத்தை நாய் நக்கியதால், Sepsis என்ற தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பால், 32 வாரங்கள் ஹாஸ்பிடலில் இருந்த மஞ்சீத்திற்கு, தொற்று வேகமாக பரவியதால் உயிரைக் காப்பாற்ற அவரது கை, கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. காயங்களில் நாய் நக்கினால், கிருமிகள் மூலம் நோய்த்தொற்று ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர்.
