கருப்பாயூரணியில் நற்செய்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது
மதுரை மாவட்டம், கருப்பாயூரணி :
பூரண கிருபை ஏ.ஜி. ஆசீர்வாத மையம் சார்பாக பிப்ரவரி 1ஆம் தேதி காலை மற்றும் மாலை நேரங்களில் நற்செய்தி பெருவிழா ஆன்மீக உற்சாகத்துடன் நடைபெற்றது. கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டு இறைஆராதனையில் ஈடுபட்டனர்.
இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஆசியாவின் முதல் திருநங்கை போதகர் எனப் போற்றப்படும் எஸ்தர் பாரதி அவர்கள் கலந்து கொண்டு இறைச்செய்தி வழங்கினார். தனது வாழ்க்கைச் சாட்சியத்தையும், கடவுளின் கிருபை மனிதனை எப்படி மாற்றுகிறது என்பதையும் உருக்கமாக பகிர்ந்து, மக்களுக்காக தனிப்பட்ட ஜெபங்களையும் செய்தார். பலர் ஆறுதல், நம்பிக்கை மற்றும் ஆன்மீக உறுதியுடன் திரும்பினர்.
துதி ஆராதனையை ஈரோட்டிலிருந்து வந்த மனோவா தலைமையிலான குழு நடத்தினர். ஆவிக்குரிய பாடல்கள் மற்றும் சங்கீதங்களின் மூலம் திரளான மக்கள் ஆராதனையில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர்.
இந்த நற்செய்தி பெருவிழாவை ஸ்தல சபை போதகர், போதகர் பெவிஸ்டன் அவர்கள் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் சமூகத்தின் நலனுக்காகவும், குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இளைஞர்களின் எதிர்காலத்திற்காகவும் சிறப்பு ஜெபம் நடத்தப்பட்டது.
இந்த ஆன்மீக விழா கருப்பாயூரணி கிராம மக்களிடையே பெரும் உற்சாகத்தையும், புதிய நம்பிக்கையையும் உருவாக்கியதாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
