மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு பகுதியில் வடலூர் வள்ளலார் தினத்தை முன்னிட்டு பிப். 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து விதமான இறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. விற்பனை கடைகளை திறக்கவும் கூடாது, மீறி விற்பனை செய்தால் இறைச்சிகளை பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
