மதுரை:
மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றி வந்த 15 இன்ஸ்பெக்டர்கள் புதுப் பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்ற உத்தரவை மாநகரக் காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் நேற்று பிறப்பித்தார். அவனியாபுரம், சீரியஸ் கிரைம் பிரிவு, அண்ணாநகர், திருநகர், கீரைத்துறை, தெப்பக்குளம், கூடல்புதூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் பணியாற்றிய அதிகாரிகள் புதிய பிரிவுகளுக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர். பொதுமக்கள் சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய இடங்களில் பணியை விரைவில் பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
