மதுரை:
மதுரையில் 2026 ஜனவரி 8 முதல் 11 வரை உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு நடைபெறும் என்று எழுமின் அமைப்பின் நிறுவனர் ம. ஜெகத் கஸ்பர் தெரிவித்தார்.
மதுரையில் நேற்று அவர் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த மாநாடு ‘சங்கம் 5’ என்ற பெயரில் 16-வது ஆண்டாக நடைபெறுகிறது.
மாநாடு வேலம்மாள் மருத்துவமனை அருகிலுள்ள ஐடா ஸ்கட்டர் மற்றும் ஜி.ஆர்டி நட்சத்திர விடுதி அரங்குகளில் நடைபெறும்.
50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2,000 தமிழ் தொழிலதிபர்கள் பங்கேற்கிறார்கள்.
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பங்கேற்பு உள்ளது.
ரூ.2,000 கோடி மதிப்பிலான வணிக பரிமாற்றங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் வணிகத்தை உலக மயப்படுத்துவதே மாநாட்டின் முக்கிய நோக்கம்.
பங்கேற்பதற்கு www.tamilnse.org மூலம் அல்லது 9150060032 / 35 என்ற எண்களில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு ஜெகத் கஸ்பர் தெரிவித்தார்.
