மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி புதுப்பட்டியை சேர்ந்த செல்வம்-ரேவதி தம்பதியரின் மகள் ராஜா மணி(15). இவர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் செல்போனில் பேசியபடி நின்ற ராஜாமணி எதிர்பாராத விதமாக அங்கு சென்ற மின் கம்பியில் கை வைக்க, அதில் மின் கசிவு இருந்த சூழலில், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
