மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டுமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சிக்கந்தர் சாவடி அருகே இ.எம்.டி. நகர் விரிவாக்க பகுதி சேர்ந்த மகேந்திரன் 67 மனைவியுடன் 10 நாட்களுக்கு முன் பரமக்குடி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகை ரூ 45 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. அலங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
