ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நடந்த கொலை சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கோபி அருகே உள்ளது கெட்டிசெவியூர்.. இங்கு மோகன் என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது.இதில், வாழை, சோளம் போன்றவற்றை பயிரிட்டுள்ளார். இதே தோட்டத்தில் காளான் வளர்வதால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள், மோகன் வீட்டுக்கு காளான் பறிக்க வருவார்கள்.. மேலும், தோட்டத்தில் கிடக்கும் தீவனங்களையும் தங்களது கால்நடைகளுக்காக சேகரித்து கொண்டு போவார்கள். வாழைத் தோப்பில் குழி அப்படித்தான் நேற்றைய தினமும் முருகேசன் என்பவர், மோகனின் வாழைத்தோப்பிற்கு வந்துள்ளார்.. அப்போது அந்த பகுதி முழுவதுமே ரத்தக்கறையாக காணப்பட்டது.. தோட்டப்பகுதி எல்லாம் ரத்தம் சிந்தியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.. பிறகு அதே தோட்டத்தில் ஏதோ குழிதோண்டி மூடப்பட்டதற்கான அடையாளமும் இருந்தது,.
இதைப்பார்த்து பதறிப்போன முருகேசன், உடனடியாக மோகனுக்கு தகவல் தந்தார்.. தோட்ட உரிமையாளர் மோகனும் உடனடியாக விரைந்து வந்து, ரத்தம் சிதறிக்கிடப்பதை கண்டு, சிறுவலூர் போலீசாருக்கும், நம்பியூர் தாசில்தாருக்கும், உடனே பெருந்துறை அரசு மருத்துவர் நந்தகுமாருக்கும் தகவல் அளித்தார். சிறிது நேரத்தில் அதிகாரிகள் விரைந்து வந்த நிலையில், அவர்கள் முன்னிலையில், அந்த குழி தோண்டப்பட்டது. அப்போதுதான், சுமார் 3 அடி ஆழத்தில் உட்கார்ந்த நிலையில் பெண்ணின் சடலம் நிர்வாணமாக இருப்பதை கண்டு மொத்த பேரும் அதிர்ச்சி அடைந்தனர். வாழைத் தோட்டத்தில் பெண் கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு 30 வயதிருக்கும் என தெரிகிறது. அப்பெண்ணின் தலையில் கல்லால் தாக்கியும், சிறிய கத்தியால் கழுத்தில் குத்தியும் கொன்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். சடலம் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களும் கிடந்திருக்கின்றன.. பெண்ணை கொலை செய்தபிறகு சடலத்தை தோட்டத்தில் கொன்று வந்து புதைத்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரிந்த பெண்? போன் சிக்னல் ஆனால், கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது தெரியவில்லை.. அந்த பெண்ணை பற்றிய அடையாளம் தெரிந்தால்தான், அவரை கொன்றவர்களை கண்டுபிடிக்க முடியும் என்பதால் அதற்கான விசாரணை நடந்து வருகிறது. இதற்காக செல்போன் சிக்னல், வாகனங்களின் பதிவு எண்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
